சென்னை:போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்குப் பணி நியமனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இதையடுத்து,பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு, தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்தது. அதன்படி, ஜன.3ஆம் தேதி முதல்கட்டப் பேச்சு நடைபெற்றது. அப்போது பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொள்ள மறுத்த தொழிற்சங்கங்கள் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்தன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் அடைந்தது. இதைத் தொடர்ந்து முதல் முதலாகச் சென்னை திருவான்மியூர் மாநகரப் பேருந்து பணிமனையில் வேலைநிறுத்த அறிவிப்பு ஒட்டப்பட்டு பேருந்துகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் சென்னை முழுவதும் மாநகரப் பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. சென்னையில், இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்.