தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி... தி.நகரில் போக்குவரத்து மாற்றம் - Chennai T Nagar

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு.. தீபாவளியை ஒட்டி தி.நகரில் போக்குவரத்து மாற்றம்
பொதுமக்கள் கவனத்திற்கு.. தீபாவளியை ஒட்டி தி.நகரில் போக்குவரத்து மாற்றம்

By

Published : Oct 7, 2022, 1:14 PM IST

சென்னை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் தியாகராய நகர் வட்டார பகுதிகளுக்கு அதிகளவில் வருகை தர வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கிலும் வருகிற அக்டோபர் 8 முதல் 24 ஆம் தேதி வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தேவைக்கேற்ப ஆட்டோக்களின் இயக்கமானது, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலைச் சந்திப்பிலிருந்தும், ரோகிணி சிக்னல் சந்திப்பிலிருந்தும் வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலைச் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்தும், பிருந்தாவன் சந்திப்பிலிருந்தும் மற்றும் கண்ணம்மாபேட்டைச் சந்திப்பிலிருந்தும் பனகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படுகிறது.

மேலும் சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தி.நகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இத்தகைய வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை தி.நகர் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் தணிகாசலம் சாலை பன்னடுக்கு வாகன நிறுத்தமிடங்கள் தவிர விடுமுறை நாட்களில், பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப்பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மற்றும் தண்டபானி சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்

ABOUT THE AUTHOR

...view details