தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதரவற்ற குழந்தைகளை வைத்து நூதன முறையில் போக்குவரத்து விழிப்புணர்வு! - போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு

சென்னை : ஆதரவற்ற குழந்தைகளை வைத்து நூதன முறையில் போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்.

traffic awareness
traffic awareness

By

Published : Nov 26, 2019, 2:50 PM IST

சென்னை பரங்கிமலை போக்குவரத்து காவல் துறை சார்பில் ’போக்குவரத்து விதிகளை மதிப்போம், பசுமை காப்போம்’ என்ற பெயரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பட்ரோட்டில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்சியில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியவர்களுக்கு போக்குவரத்து அவசர எண்ணான 103ஐ நினைவுப்படுத்தும் வகையில் 103 வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அதேபோல் விதிகளை பின்பற்றி தலை கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஆதரவற்ற குழந்தைகள் கையால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நூதன முறையில் போக்குவரத்து விழிப்புணர்வு

மேலும், அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பொருட்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:

கடத்ததல் தங்கம் 7.8 கிலோ பறிமுதல்...!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details