சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது. அப்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு மழை மற்றும் காற்று வீசியது.
இதனால் சென்னையின் பல இடங்களில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனிடையே நேற்றைய தினம் (டிச.9) காந்தி சிலைக்கும், நேப்பியர் பாலத்துக்கும் இடையிலான காமராஜர் சாலையில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.