சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்(39). இவர் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், இவரது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட paytm QR Code ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டி வைத்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களாக வாடிக்கையாளர்கள் அனுப்பும் தொகை வங்கி கணக்கிற்கு வராமல் இருப்பதாகவும், மோசடி நடப்பதாகவும் கூறி உரிமையாளர் ஆனந்த், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் கடந்த 3 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், டிபன் கடையில் ஒட்டி வைத்திருந்த QR Code ஐ ஸ்கேன் செய்து சிறிய தொகையை அனுப்பியுள்ளனர்.
அப்போது உரிமையாளர் ஆனந்த் உடைய வங்கி கணக்கிற்கு பணம் செல்லாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், பணம் சென்ற வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது ஸ்ரீதர் என்பவருடைய வங்கி கணக்கிற்கு பணம் செல்வதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கண்ணகி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் (21) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஸ்ரீதர், “திருவான்மியூரில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறேன். மோசடி செய்வதற்காக சென்னை காவல்துறையில் காவலராக பணிபுரிவதாக கூறி, போலியான அடையாள அட்டை தயாரித்து வைத்துள்ளேன்.