ரஷ்யாவின், வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில், மருத்துவ படிப்பு படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஆர். விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாகு ஆகியோர் ஞாயிறு (ஆக. 9) அன்று வால்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் அவர்கள் உடல்களை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டுவர ஆவன செய்ய வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (ஆக. 11) நேரில் சந்தித்து கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளார்.