தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரத்தையும் ரயில்வே முனையமாக்க டி.ஆர். பாலு கோரிக்கை! - ரயில்வே ஆலோசனை கூட்டம்

சென்னை: தாம்பரத்தையும் ரயில்வே முனையமாக்க வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கோரிக்கைவைத்துள்ளார்.

tr baalu

By

Published : Sep 9, 2019, 12:35 PM IST

ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு அவரவர் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, “தேர்தல் காலத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் உள்ளிட்ட விவரங்களுடன் மனு கொடுத்துள்ளேன். தேஜஸ் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து செல்கிறது என்பதால், சென்னை போல் தாம்பரத்தையும் மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளேன். சென்னையைவிட தாம்பரத்தில் ஏறும் மக்கள் அதிகம் என்பதை சொல்லியுள்ளோம்.

ஆலோசனைக் கூட்டம்

அம்பத்தூர் ரயில் நிலையம் காமராஜரும் காந்தியும் சந்தித்துக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையமாகும். அந்த ரயில் நிலையத்தை மேம்படுத்தாமல் இருப்பது குறித்து கூறியுள்ளேன். அம்பத்தூர் ரயில் நிலையம் செல்ல நெடுஞ்சாலை அமைக்கக் கோரியும் நடக்கவில்லை. இதற்காக ரயில்வே அமைச்சகம் ஒதுக்கிய தொகையில் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details