தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்து -12 பேர் காயம்! - tourist van accident

சென்னை: சீர்காழி அருகே ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்தனர்.

tourist-van-accident
tourist-van-accident

By

Published : Dec 24, 2019, 1:55 PM IST

சென்னை மணலியில் இருந்து முருகன் பக்தர்கள் அறுபடை வீடு சுற்றுலாவிற்காகக் புறப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்தடுத்த முருகன் கோயில்களுக்குச் செல்வதற்காக சீர்காழி அருகே கோவில்பத்து நான்கு பிரிவு புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து அவர்களின் வேன்மோதியதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கழுமலை ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்து

இதில் பயணம் செய்த முருக பக்தர்கள், 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் வேனை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, விபத்து குறித்து சீர்காழி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காவலர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details