தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விரைவில் சுற்றுலாத்தலமாக மாறும் கீழடி' - அமைச்சர் மதிவேந்தன்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, 'தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கீழடியை சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

tourism minister mathiventhan  Discover Tamilnadu  World Tourism Day  tourism minister  tourism minister mathiventhan inaugurate Discover Tamilnadu  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  சுற்றுலாத்துறை அமைச்சர்  சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்  தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம்  உலக சுற்றுலா தினம்  சுற்றுலா
சுற்றுலா தினம்

By

Published : Sep 27, 2021, 5:19 PM IST

சென்னை:உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில், 'தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்' என்ற நிகழ்ச்சியை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடக்கி வைத்தார்.

சமூக வலைத்தள ஆர்வலர்கள் மூலம் தமிழ்நாட்டில் அறியப்படாத சுற்றுலாத்தலங்களை மக்களுக்கு அறியப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பேருந்து மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 10 பேர் கொண்ட சமூக ஊடகவியலாளர்கள் (Social Media Influencers Team) பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கான வாகனத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சுற்றுலாத்தலங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சி

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், "சமூக வலைத்தளங்களில் சுற்றுலாத்துறையில் ஆர்வமுள்ள 10 பேர் கொண்ட குழு, தமிழ்நாடு முழுவதும் அறியப்படாத ஒவ்வொரு சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று அந்த இடத்தின் வரலாற்றை புகைப்படங்கள் வீடியோக்கள் மூலமாக தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர உள்ளனர்.

இன்று (செப் 27) முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை இந்தக் குழு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

மக்கள் அறியாத சுற்றுலாத்தலங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியே இந்த பயணத்தின் நோக்கம்.

கரோனாவால் சுற்றுலாத்தலங்கள் நலிவடைந்துள்ளதால், அதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கீழடியை சுற்றுலாத் தலமாக மாற்ற முன்னதாக முதலமைச்சர் நிதி அறிவித்திருக்கிறார்.

அதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாத்துறைக்கென உள்ள செயலியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'விளம்பரப் பலகை ஆங்கிலத்தில் இருந்தால் என்ன, நான் தமிழில் தானே பேசுகிறேன்’ என நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறையின் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இருந்தனர்.

இதையும் படிங்க: போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள்

ABOUT THE AUTHOR

...view details