தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசு: 10 ரூபாயில் சென்னையை சுற்றலாம்! - 10 ரூபாயில் சென்னையை சுற்றலாம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒருநாள் முழுவதும் சென்னையைச் சுற்றிப்பார்க்க வெறும் 10 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10 ரூபாயில் சென்னையை சுற்றலாம்
10 ரூபாயில் சென்னையை சுற்றலாம்

By

Published : Jan 13, 2020, 3:10 PM IST

சுற்றுலா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்களிடையே சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கிலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நகர சுற்றுலா ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாட்டு பொங்கல் (ஜனவரி 16) அன்று மட்டும் 10 ரூபாய்க்கு சென்னை நகரை சுற்றலாம். நகரின் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கிக் கொள்ளலாம்.

சுற்றுலாத் துறை வளாகத்திலிருந்து (தீவுத் திடல்) மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்லும் வகையில் இந்த சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இதில் பயணம் மேற்கொள்ளலாம். இதேபோல திருச்சியிலும் நகர சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தொடர்புக்கு: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை -2, தொலைபேசி எண்: 04425333333/25333444/25333857,
180042531111 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும், www.tamilnadutourism.org என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டை காண சிறப்பு சுற்றுலா!

ABOUT THE AUTHOR

...view details