2018-19, 2019-20ஆம் கல்வி ஆண்டுகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 13 லட்சத்து 92 ஆயிரத்து 58 விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட ஒரு கடிதத்தில், 2018-19ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 4, 57,792 லேப்டாப்களும், அதே ஆண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 4,65,796 லேப்டாப்களும், 2019-20ஆம் ஆண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 4,68,470 லேப்டாப்களும் என ஒட்டுமொத்தமாக 13 லட்சத்து, 92 ஆயிரத்து 58 லேப்டாப் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கப்ட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.