சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மகாபலிபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் 200 நாடுகளிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட முன்னணி செஸ் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரபலப்படுத்தவும் மக்களின் ஆதரவைப் பெறவும் ஜோதி ஓட்டத்தை (Torch relay) இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு கொண்டு சென்று இறுதியாகப்போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோதி ஓட்டம் தொடங்கும் தேதி மற்றும் பாதை குறித்து மத்திய, மாநில அரசுகள் போட்டியை நடத்தும் குழு உடன் கலந்தாலோசிக்க உள்ளது. மேலும் வீரர்களின் போக்குவரத்துக்காக இன்னோவா கிரிஸ்டா 545, ஆடி, பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற சொகுசு கார்களையும், குளிரூட்டப்பட்ட பேருந்துகளையும் வாடகைக்கு டெண்டர் மூலம் பெற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த ஜோதி ஓட்டம் - Chess Olympiad competition
சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த ஜோதி ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
chess olympiad