தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - 11 ஏடிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ..

top10 news@1pm
top10 news@1pm

By

Published : Mar 24, 2021, 1:05 PM IST

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு; காவலர், 71 போராட்டக்காரர்கள் மீது குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டதாக, ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 71 பேர் மீது சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 ஏடிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் உட்பட 11 ஏடிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

’நான் அரசியலுக்கு வருகிறேனா...’ - கங்கனா விளக்கம்

சென்னை: நான் அரசியலுக்கு வருவதாக பரப்பப்படும் தகவல் உண்மை இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

வாக்குகளை வேட்டையாடும் உத்தியா தேர்தல் இலவசங்கள்?

தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றுப் பக்கங்களை நாம் திருப்பி பார்த்தோமானால், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றிய காலத்திலிருந்தே, இந்த அசாத்தியங்களைச் சாத்தியமாக்கியத் தேர்தல் அறிவிப்புகள் தொடங்கிவிட்டது தெரியவரும்.

சிறுநீர் குடிக்குமாறு வற்புறுத்தி இளைஞரைத் தாக்கிய கும்பல்!

ராஜஸ்தான்: பார்மர் மாவட்டத்தில் கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவில் உயிரிழந்த காதல் பட விருச்சககாந்த்!

சென்னை: காதல் திரைப்படத்தில் நடித்த நடிகர் விருச்சககாந்த், ஆட்டோவில் தூங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவிலான பின்னோக்கி நீந்துதல் போட்டியில் தங்கம் வென்ற மயிலாடுதுறை இளைஞர்!

மயிலாடுதுறை: பயிற்சியாளர் இல்லாமல் கிராம பொதுக் குளத்தில் நீச்சல் பயிற்சி செய்த இளைஞர், நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

’பிரபாஸுடன் பழகிய பிறகு தான் இது தெரிந்தது’ - நடிகை கிருதி சனான்

பிரபாஸை பார்த்ததும் அவர் கூச்ச சுபாவம் கொண்டவர் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் அவர் நிஜத்தில் அப்படி இல்லை என்றும் நடிகை கிருதி சனான் தெரிவித்துள்ளார்.

’ராமநாதபுரத்தில் 288 பதற்றமான வாக்குச் சாவடிகள்’ - ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம்: ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர், ராமநாதபுரத்தில் 288 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

மக்களுக்கு முகக்கவசம் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

காஞ்சிபுரம்: கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு முகக்கவசம் வழங்கி முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான வி.சோமசுந்தரம் வாக்கு சேகரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details