தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm - ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top ten news three pm
top ten news three pm

By

Published : Jan 14, 2021, 3:05 PM IST

தமிழரும் ஜல்லிக்கட்டும்- வீரம் செறிந்த காதல் கதை!

ஜல்லிக்கட்டு.. இந்த வீரம் செறிந்த காதல் விளையாட்டின் பாரிய புகழை அகநானூறு, புறநானுறு, கலித்தொகை, சிலப்பதிகாரம் என தமிழர்களின் வாழ்வியல் நூல்களில் காணலாம். வரலாற்றின் மிக தொன்மையான விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... பாயும் காளைகள்: துணிந்து அடக்கும் வீரர்கள்!

மதுரை: தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் வீரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டை கண்டுகளித்த ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின்!

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டினைப் பார்வையிட வருகை தந்த ராகுல் காந்தியின் அருகே அமர்ந்து உதயநிதி ஸ்டாலின் கோலாகலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டினை கண்டு ரசித்தார்.

காவலர்கள் குடும்பத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய முதலமைச்சர்

சென்னை: காவல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்ப்பதில் தகராறு: இளைஞர்களுக்கு கத்தி குத்து!

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் இருவரை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் கொண்டாடிய பாதுகாப்பு படை வீரர்கள்!

புதுச்சேரி: பாதுகாப்பிற்காக வந்திருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கடற்கரையில் பொங்கலிட்டு கொண்டாடினர்.

திரையில் தோன்றிய ஈஸ்வரன் - ஆர்ப்பரித்த சிம்பு ரசிகர்கள்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தடைகளை தாண்டி திட்டமிட்டபடி சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் இன்று (ஜன.14) வெளியானது.

தாய்லாந்து ஓபன்: இரண்டாம் சுற்றோடு வெளியேறிய இந்திய இணை!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் ரங்கிரெட்டி - சிராக் செட்டி இணை தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

“கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” - டிம் பெய்ன்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவொம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரண்டரை கோடி பயனாளர்கள்: வாட்ஸ்அப்பால் ஹிட்டான டெலிகிராம்!

கடந்த மூன்று நாள்களில் டெலிகிராம் செயலியில் புதிதாக இரண்டரை கோடி பயனாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details