தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news
Top 10 news

By

Published : Jan 4, 2021, 1:21 PM IST

இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை - சத்ய பிரதா சாகு

தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

'அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்'

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்

இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது!

மருத்துவ இடங்களைத் தேர்வு செய்யாத மாணவர்களுக்கு இன்றைய கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

கோபாலபுரம் கோமானின் மகன் முக.ஸ்டாலினுக்கு ஏழைகளின் தேவைகள் புரியாது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

கோபாலபுரம் கோமானின் மகன் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

ஜிமிக்கி கம்மல் புகழ் மலையாள பாடலாசிரியர் அனில் பனச்சூரான் காலமானார்

கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட மலையாளத்தின் மூத்தக் கவிஞர், பாடலாசிரியர் அனில் பனச்சூரான் காலமானார்.

புதுவையில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு!

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன

ஜைடஸ் காடிலா தடுப்பூசி மூன்றாம்கட்ட பரிசோதனைக்கு அனுமதி

அகமதாபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலாவின் கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற 14ஆம் தேதி சென்னை வருகிறார் அமித் ஷா!

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற 14ஆம் தேதி சென்னை வருகிறார்

அமெரிக்க செனட் சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றனர்.

தேர்தல் முடிவை மாற்ற அலுவலரை மிரட்டிய ட்ரம்ப் - அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒலிப்பதிவு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜார்ஜியா மாகாணத்தின் உயர் தேர்தல் அலுவரிடம் தேர்தல் முடிவை மாற்றக் கோரும் ஒலிப்பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details