தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்...

top ten news at 9 pm  top ten news  top ten  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  முக்கியச் செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  இரவு 9 மணி செய்திச் சுருக்கம்  9 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

By

Published : Aug 29, 2021, 9:32 PM IST

1. கூடுதல் மின் பளுவைத் தவிர்க்க ரூ.625 கோடி மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள்

தமிழ்நாட்டில் கூடுதல் மின் பளு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தைத் தவிர்க்க, ரூ.625 கோடி மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2. மக்களைத் தேடி மருத்துவம்: 20 நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்!

தமிழ்நாடு அரசின், 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 364 பேர் பயனடைந்துள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

3. முதுகலை மருத்துவக் கல்வி வரைவை ரத்து செய்ய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவை ரத்து செய்யவேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

4. தமிழ்நாட்டில் இன்று 1,538 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு ஐஐடி உதவிப் பேராசிரியர் விபின் கடிதம்

சென்னை ஐஐடி நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் வி.ஆர்.முரளிதரனை நிர்வாக குழுவிலிருந்து நீக்கக்கோரி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, உதவிப் பேராசிரியர் விபின் பி.விட்டில் கடிதம் எழுதியுள்ளார்.

6. புதிய ட்ரோன் விதிகள் 2021: வணிக செயல்பாடுகளின் புதிய நம்பிக்கை

உணவு டெலிவரி, மருந்துவ தேவைகள், வேளாண்மை என அனைத்திலும் தன் பங்கை உறுதிசெய்யவிருக்கிறது, ட்ரோன் தொழில்நுட்பம்.

7. ராக்கெட் குண்டு தாக்குதல் - தொடர்ந்து குறிவைக்கப்படும் காபூல் விமான நிலையம்

காபூல் விமான நிலையம் அருகே சில தினங்களுக்கு முன் பெரும் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது.

8. விடைபெற்ற ஆதித்த கரிகாலன்!

’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் விக்ரமின் பகுதிகள் நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

9. பிரபல நடிகைக்கு கிடைத்த விருது... குவியும் பாராட்டுகள்

ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 'மகாமுனி' படத்திற்காக நடிகை மஹிமா நம்பியாருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

10. PARALYMPICS: வினோத் குமாருக்கு அறிவிக்கப்பட்ட வெண்கலப் பதக்கம் நிறுத்திவைப்பு

பாரா ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலம் வென்றார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details