தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9 PM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

top ten news at 9 pm  top news  top ten  top ten news  latest news  tamilnadu news  tamilnadu latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

By

Published : Aug 27, 2021, 9:25 PM IST

1. சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு: ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்!

சென்னை ஐஐடியில் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறைத் தலைவர் ஜோத்ரி மாயா திரிபாதி, சாதி ரீதியான பகுபாடு குறித்த விசாரணை நிறைவு பெறும்வரை துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என ஐஐடியில் இருந்து விலகிய உதவிப் பேராசிரியர் விபின் ஒன்றிய கல்வியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2. அதிக சிசிடிவி கொண்ட நகரங்கள்: சென்னை 3ஆம் இடம்!

உலகிலேயே ஒரு சதுர மைல் பரப்பளவில் அதிக கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நகரங்களில் சென்னை மூன்றாம் இடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

3. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கூடுதல் பொறுப்பு!

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பு வகித்துவரும் பன்வாரிலால் புரோஹித்துக்கு, கூடுதல் பொறுப்புகள் வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

4. தடுப்பூசி போடலைனா ரூ.15 ஆயிரம் சம்பளத்துல பிடிப்பு - அமெரிக்க ஏர்லைன்ஸ் அதிரடி

அமெரிக்காவைச் சேர்ந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்று, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

5. பல்லாவரம் தோல் தொழிற்சாலையில் தீ விபத்து!

பல்லாவரம் தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாகின.

6. டிக் டாக் பிரபலங்களுக்குள் மோதல்: காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்

மதுரை, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு வந்த டிக் டாக் பிரபலங்கள் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் இருவரும் சூர்யா தேவி மீது புகார் அளித்துள்ளனர்.

7. சூர்யாவின் தயாரிப்பு நிறுவனப் பெயரில் மோசடி: விசாரணையைத் தொடங்கிய சைபர் கிரைம் போலீஸ்!

சென்னை: நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனப் பெயரில் மோசடி நடந்தது எப்படி என மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

8. வசந்தபாலன் படத்தில் இணைந்த மற்றொரு பிக்பாஸ் பிரபலம்!

அர்ஜுன் தாஸை வைத்து வசந்தபாலன் இயக்கிவரும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி இணைந்துள்ளார்.

9. TOKYO PARALYMPICS: வரலாறு படைக்கும் பவினாபென் படேல்

டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், செர்பிய வீராங்கனையை வீழ்த்தி, அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

10. TOKYO PARALYMPICS POWERLIFTING: இறுதிச்சுற்றில் 5ஆவது இடம்பிடித்த சகினா கத்துன்

பாரா ஒலிம்பிக் பவர்லிஃப்டிங் இறுதிச்சுற்றில், இந்திய வீராங்கனை சகினா கத்துன் ஐந்தாவது இடத்தைப் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details