தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 9 pm - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச்சுருக்கம்.

top ten news  top ten news at 9 pm  top ten  top news  latest news  news update  tamilnadu news  tamilnadu latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச்சுருக்கம்  இரவு 9 மணி செய்திச்சுருக்கம்  ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச்சுருக்கம்  ஈடிவி பாரத்  etvbharattamilnadu
செய்திச்சுருக்கம்

By

Published : Aug 20, 2021, 8:57 PM IST

1. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களும் ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் தா. மோ. அன்பரசன்

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களும் ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

2. காப்பீட்டுக் கழக தனியார் மயமாக்கலை அதிமுக ஆதரித்தது ஏன்? - கார்த்தி சிதம்பரம் கேள்வி

மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற ராஜிவ் காந்தியின் 77ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காப்பீட்டு கழக தனியார் மயமாக்கலை அதிமுக ஆதரித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

3. 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை- செந்தில் பாலாஜி புகார்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ் சாட்டியுள்ளார்.

4. மோடி அரசுக்கு எதிராக ஒன்று திரள்வோம் - சீதாராம் யெச்சூரி

மோடி அரசை வீழ்த்தும் யுக்தி குறித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசிப்போம் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

5. உள்நாட்டில் பாதுகாப்பு தொழிற்நுட்பம்- வெங்கையா நாயுடு

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்) உள்நாட்டில் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை தயாரிக்க வேண்டும் என குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

6. ராகுல் காந்தி பேஸ்புக் பதிவு நீக்கம்!

சமூக வலைதளம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளை மீறி பதியப்பட்டதாக ராகுல் காந்தியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகள் நீக்கப்பட்டன.

7. கல்யாண் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்த யோகி ஆதித்யநாத்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நிலை குறித்து மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

8. தொடர் வழிப்பறி - சிசிடிவி மூலம் சிக்கிய இளைஞர்

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.

9. 'சியான் 60' அப்டேட் - கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமின் 'மகான்'

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'சியான் 60' படத்திற்கு 'மகான்' என பெயரிடப்பட்டுள்ளது.

10. மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா: சிறந்த நடிகை விருதை தட்டிச் சென்ற சமந்தா

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகை சமந்தாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details