தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் top 10 news at 9 am - இன்றைய முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 9 am  top ten  top news  top ten news  tamil nadu news  tamilnadu latest news  latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்தி சுருக்கம்

By

Published : Oct 18, 2021, 9:18 AM IST

1. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை

அதிமுகவைச் சேர்ந்த சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

2. 1996இல் அதிமுக தோல்விக்கு காரணம் இவரே! - புகாரடுக்கும் ஜெயக்குமார்

1996ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்ததற்கான காரணமானவர் யார் என்பது பற்றியும், அவரால் கட்சியில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் புகாராக அடுக்குகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

3. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 'அல்வா'!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அல்வாவுடன் கூடிய இனிப்பு வழங்குவதற்கான, விலை ஒப்பந்தப் புள்ளிகளை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து போக்குவரத்துக் கழகங்கள் கோரியுள்ளன.

4. பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரியில், கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

5. நீச்சல் குளம் சீரமைக்கும் பணி: மாணவர்கள் அவதி

கரோனா ஊரடங்கு காலங்களிலேயே நீச்சல் குளத்தினைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளாததால், மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

6. தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில், சுற்றுலாப் பயணிகள் பரிசலில் சென்று சினி அருவியில் குளித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

7. சென்னை ஐஐடியில் 56 நாய்கள் இறப்புக்கு காரணம் என்ன? - அமைச்சர் பதில்

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 56 நாய்கள் இறந்துள்ளதற்கான காரணம் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விரிவாக விளக்கமளித்துள்ளார்.

8. சந்திரமுகிக்கு இன்று பிறந்தநாள்: வேட்டையனின் வாழ்த்துக்காக வெயிட்டிங்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

9. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

கிரிக்கெட் வீரர் யுஷ்வேந்திர சாஹலின் சாதி குறித்து விமர்சித்தது தொடர்பாக வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

10. T20 WORLDCUP: ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி

டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் நாளான நேற்று (அக். 17) நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றிபெற்றன.

ABOUT THE AUTHOR

...view details