தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்...

செய்திச்சுருக்கம்
செய்திச்சுருக்கம்

By

Published : Jul 25, 2021, 9:13 AM IST

1. ரூ. 2.19 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 2.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜூலை 24) ஆய்வு செய்தார்.

2. ஆன்மீக மக்களுக்கு இது பொற்கால ஆட்சி - அமைச்சர் சேகர்பாபு

ஆன்மீக மக்களுக்கு ஒரு பொற்கால ஆட்சியாகவே இந்த திமுக ஆட்சி இருக்கும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

3. பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பறவைகள் சரணாயலத்தை படகில் சென்று தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று(ஜூலை.24) ஆய்வு செய்தார்.

4. பெகாசஸ் விவகாரம்- மோடி அரசு பதவி விலக வலியுறுத்தும் அரசியல் கட்சிகள்

பெகாசஸ் விவாகரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, மோடி அரசு பதவி விலக வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் நேற்று(ஜூலை.24) கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

5. போலி தங்க நகைகள் விற்பனை- சரவணா ஸ்டோர் தங்க மாளிகை மீது வழக்கு!

மருத்துவரிடம் போலி தங்க நகைகளை விற்பனை செய்த சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை கடையின் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

6. குட்கா விற்பனை செய்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

7. தடைசெய்யப்பட வலையில் மீன் பிடிப்பு - 200 கிலோ மீன்கள் பறிமுதல்

வனகிரி மீனவ கிராமத்தில் தடை செய்யப்பட்ட வலையில் பிடிக்கப்பட்ட 200 கிலோ மத்தி மீன்களை, மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

8. முதலமைச்சர் சுவரொட்டி மீது சேற்றை பூசியது யார்?

வாணியம்பாடியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுவரொட்டி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சேற்றை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

9. கடமை தவறிய இரு காவலர்கள் இடமாற்றம்!

பேர்ணாம்பட்டு பகுதியில் சூதாட்டம் குறித்து நடவடிக்கை எடுக்க தவறிய பேர்ணாம்பட்டு ஆய்வாளர் மற்றும் எஸ்.பி.தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து வேலூர் எஸ்.பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

10. Tokyo Olympics: பி வி சிந்து அபார வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவு குரூப் ஆட்டத்தில் பி வி சிந்து நேர் செட்களில் அபார வெற்றி பெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details