தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்...

செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

By

Published : Jul 24, 2021, 8:57 AM IST

1. கரோனா தடுப்பூசி: முதல் டோஸ் செலுத்திக்கொண்ட காவலர் உயிரிழப்பு!

கரோனா தொற்று தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட ஊர்க்காவல்படை காவலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

2. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு உரிய நடவடிக்கை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் விளக்கத்தைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

3. மாயமான 11 மீனவர்கள் பத்திரமாக மீட்பு..!

நடுக்கடலிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட 11 மீனவர்களை காசிமேடு துறைமுகத்தில் எம்எல்ஏ வரவேற்று ஆறுதல் கூறினார்.

4. 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழப்பு!

புதுவண்ணாரப்பேட்டை குடோனில் மேற்கூரையில் 40 அடி உயரத்தில் வேலை செய்தவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

5. செல்போன் விளையாட்டு: தந்தை திட்டியதால் மகன் தற்கொலை!

செல்போனில் விளையாடியதற்காக தந்தை திட்டியதால் பள்ளிச் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

6. இந்தியா திரும்ப பணம் இல்லை- கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது

துபாயிலிருந்து இந்தியா திரும்ப பணம் இல்லாததால் கடத்தலில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை அமைந்தகரை காவல் துறையினர் கைது செய்தனர்.

7. ரூ.2 கோடி மோசடி- பிடிபட்ட கேடி தம்பதியினர்

சென்னையில் ரெடிமேட் ஆடைகள் கொள்முதல் செய்து சுமார் 2 கோடி ரூபாய் வரை பணமோசடி செய்த கணவன் மனைவியை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

8. ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது

சென்னை அண்ணாநகரில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை உதவி ஆணையர் லஞ்ச ஒழிப்புதுறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

9. Tokyo Olympics: தமிழ்நாட்டின் இளவேனில் ஏமாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபில் தகுதிச் சுற்றுப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

10. Tokyo Olympics- சீனா முதல் தங்கம்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை சீனா பதிவு செய்தது. இரண்டாம் இடத்தை ரஷ்யாவும் (வெள்ளி), மூன்றாம் இடத்தை சுவிட்சர்லாந்தும் (வெண்கலம்) பெற்றுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details