தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 23, 2021, 7:24 PM IST

கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி... வலிமை பட 'கிளிம்ப்ஸ்' ரிலீஸ்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் (முன்னோட்ட காணொலி) இன்று மாலை வெளியாகி ரசிகர்களை குதூகலமடையச் செய்துள்ளது.

'தர்மத்தின் தலைவன்' படபாணியில் சட்டப்பேரவையில் வேட்டி அவிழ்ந்ததுகூட தெரியாமல் பேசிய சித்தராமையா

கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தனது வேட்டி நழுவியதுகூட அறியாமல் தொடர்ந்து பேசி வந்தது, பேரவையில் கராசார விவாதத்தை எழுப்பியது.

புதிய காவல் ஆணையரகம் அமைப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை

சென்னையில் புதிய காவல் ஆணையரகத்தை உருவாக்குவது குறித்து டிஜிபி உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

மீண்டும் களமிறங்கும் பானுப்பிரியாவின் தங்கை

தமிழ் சினிமாவில் எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் அறிமுகமான நடிகை சாந்திப்பிரியா மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

நீட் விவகாரத்தில் நல்லதே நடக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விவகாரத்தில் நிச்சயம் தமிழ்நாட்டிற்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் விவகாரம்: அடுத்த வாரத்தில் வல்லுநர் குழு - உச்ச நீதிமன்றம்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய, ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்று அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கவிஞர் லீனா மணிமேகலை வழக்கு - மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்போர்ட்டை முடக்கிய உத்தரவை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை தாக்கல் செய்த மனுவுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவப்பணியாளர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில், கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் 6 கைக்குழந்தைகள் மீட்பு

மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் பிச்சை எடுத்த நபர்களிடம் இருந்து 6 கைக்குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

காட்டில் விடப்பட்ட ரிவால்டோ - காணொலிப் பதிவுத் தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவு!

காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து காணொலிப் பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details