தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 PM - இரவு 7 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச்சுருக்கம்...

top ten news  top ten  top news  latset news  tamilnadu news  tamilnadu latest news  news updates  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கிய செய்திகள்  செய்திச்சுருக்கம்  ஈடிவி பாரத்  இரவு 7 மணி செய்திச்சுருக்கம்  ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச்சுருக்கம்
செய்திச்சுருக்கம்

By

Published : Aug 22, 2021, 7:00 PM IST

1. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் பயன்

'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில், இதுவரை ஒரு லட்சத்து 17ஆயிரத்து 55 பேர் பயனடைந்துள்ளனர் என அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பவானிசாகர் அணையில் இருந்து நீர் நிறுத்தம்: பொதுப்பணித்துறை

கீழ்பவானி வாய்க்காலின் கரையைப் பலப்படுத்தும் வரை பவானிசாகர் அணையில் இருந்து நீர் நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

3. மாநிலங்களவை தேர்தல்: திமுக சார்பில் களமிறங்குகிறார் எம்.எம். அப்துல்லா

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

4. 'ஒருபுறம் மகிழ்ச்சி,மறுபுறம் வருத்தம்...' - இல. கணேசன்

’ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற அடிப்படையில் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவது வருத்தம் அளிக்கிறது என இல.கணேசன் தெரிவித்தார்.

5. தங்கை பிரியங்காவுக்கு என் வாழ்வில் சிறப்பிடம் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி

ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி அண்ணன், தங்கையான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் சமூக வலைதளத்தில் மாறி,மாறி தங்கள் அன்பைப் பறிமாறிக்கொண்டனர்.

6. ஆப்கனிலிருந்து திரும்பிய 168 பேருக்கும் கரோனா பரிசோதனை!

ஆப்கனிலிருந்து இந்தியா வந்துள்ள 168 பேருக்கும் விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

7. லஞ்சம் வாங்கிய போலீஸ் - வீடியோ வெளியீடு

எழும்பூரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்கிய நுண்ணறிவு பிரிவு காவலரை, காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

8. பொறாமையால் நிகழ்ந்த விபரீதம்: வில்வித்தை வீரரை கத்தியால் குத்திய இளைஞர் கைது

தேசிய அளவில் நடந்த வில்வித்தைப் போட்டியில், தமிழ்நாட்டின் சார்பாக கலந்துகொள்ளவிருந்த வீரரை கத்தியால் குத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

9. திரையரங்குகள் திறப்பு - வரிசையாக வெளியீட்டுக்கு தயாராகும் படங்கள்

தமிழ்நாட்டில் நாளை (ஆக.23) முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள நிலையில் வரிசையாக பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

10. சிரஞ்சீவி பிறந்தநாள்: புது பட அப்டேட் வெளியீடு!

நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு போலா சங்கர் பட டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details