தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - காலை செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தினைக் காணலாம்.

top ten news at 7 am  top ten  top news  top ten news  latest news  tamil nadu news  tamilnadu news update  tamilnadu latest news  news update  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  காலை செய்திகள்  செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

By

Published : Oct 19, 2021, 7:01 AM IST

சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 1,192 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 1,192 நபர்கள் புதிதாக கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் வீட்டில் சுமார் ரூ.24 லட்சம், 4.8 கிலோ தங்க நகை பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி

முன்னாள் அதிமுக அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 4.87 கிலோ நகைகள், 24 லட்சம் பணம் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கேரள பெருவெள்ளம் - திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்

கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் அக். 20இல் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரம் ஸ்ரீமதி, டி. பரத சக்ரவர்த்தி, ஆர். விஜயகுமார், முகமது ஷபீக் ஆகியோர் நாளை (அக். 20) பதவியேற்கவுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூரில் தென்னை விவசாயத்தைக் காக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தென்னை விவசாயத்திற்கு இடையூறாக உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து 200-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை!

தேரா சச்சா சௌதா ஆன்மிக அமைப்பில் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் நான்கு பேருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இஸ்ரேலில் ஜெய்சங்கர்... பேச்சுவார்த்தை தீவிரம்... தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுமா?

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐந்து நாள்கள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவர் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டின் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான லேர் லாபிட் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

புதிய ஹேர்ஸ்டைலுடன் ஷில்பா ஷெட்டி!

புதிய ஹேர் ஸ்டைலுடன் ஷில்பா ஷெட்டி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details