தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2021, 7:04 AM IST

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news  top ten  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  news updates  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  காலை செய்திகள்  காலை 7 மணி செய்திகள்  7 மணி செய்திச் சுருக்கம்  காலை 7 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

1. 'பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்க'

பொதுச் சொத்துகளைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

2. சென்னையில் 3 ரயில் நிலையங்களில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள்

சென்னையில் உள்ள சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் வசதிக்காக, சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

3. கடலூரில் மூன்று ஆசிரியைகளுக்கு கரோனா!

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து மூன்று நாள்களில் மூன்று ஆசிரியைகளுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

4. பள்ளிக்குள் புகுந்த கரோனா - அரியலூரில் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதி

அரியலூரில் தனியார் பள்ளிகளில் படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

5. 'கச்சத்தீவில் சீனா... இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல்'

கச்சத்தீவில் சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அதனை மீட்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராம மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

6. இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை ஜாலியன் வாலாபாக்!

துல்லியமாக மாலை 5.30 மணிக்கு துர்கா தாஸ் தனது உரையைத் தொடங்கிய தருணத்தில், துப்பாக்கிகள் சுடும் சத்தம் விண்ணைப் பிளந்தன.

7. மிளகாய்ப் பொடி தூவி நகை திருடிய பெண்: விரட்டிப் பிடித்த மக்கள்

திருவாரூர் கடைவீதியில் நகைக்கடையில் மிளகாய்ப் பொடியைத் தூவி ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு தப்பியோடிய பெண்ணை மக்கள் விரட்டிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

8. பெற்றோர் கண்டிப்பு: நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து கீழே குதித்த இளைஞர்

வேலைக்குச் செல்லவில்லை எனப் பெற்றோர் கண்டித்ததால் நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து இளைஞர் கீழே குதித்தார்.

9. சின்னக் கீறல் கூட இல்லை; நடிகர் சித்தார்த் உயிரிழந்தது எப்படி?

நடிகர் சித்தார்த் சுக்லா உயிரிழப்பிற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அவரது உடற்கூராய்வு அறிக்கையில், “காயங்கள் எதுவும் தென்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

10. 'இடியட்' - திரையரங்கில் வெளியிடுவது உறுதி

மிர்ச்சி 'சிவா' நடித்துள்ள இடியட் திரைப்படம் திரையரங்கில் வெளியிடுவதை உறுதிசெய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details