தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 7 AM - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 7 am  top ten news  top news  latest news  tamilnadu latest news  tamilnadu news  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  7 மணி செய்திச் சுருக்கம்  காலை 7 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

By

Published : Sep 1, 2021, 7:09 AM IST

1. பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி புத்தகம் தயார்!

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று ஊரடங்கிற்குப் பின்னர், செப்டம்பர் 1இல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களுக்குப் பழைய பாடங்களை நினைவுபடுத்தும் வகையில், புத்தாக்கப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது.

2. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு - ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளன?

கரோனா மூன்றாவது அலை பரவும் என்ற அச்சத்திற்கு மத்தியில் ஆசிரியர்கள் மீதான நம்பிக்கையில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம் எனப் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

3. தானியங்கி முறையில் பட்டா மாறுதல்

பட்டா மாறுதல்களை தானியங்கி வாயிலாக மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. உரிமம் இல்லாத கல் குவாரிக்கு ஆதரவாக இருந்த அலுவலர்கள் - நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

உரிமம் இல்லாத கல் குவாரிகள் தொடர்ந்து செயல்பட அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தாரர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. திருப்பத்தூர் அருகே இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் முறைகேடு

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்தனர்.

6. எம்ஜிஆர் சிலை உடைப்பு: ஆத்தூரில் பரபரப்பு

ஆத்தூரில் எம்ஜிஆர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

7. ஆட்டோவில் மோடியை விமர்சித்து பேனர்: பாஜக புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை!

பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து ஆட்டோவின் பின்புறம் ஒட்டப்பட்டிருந்த பேனர் குறித்து பாஜகவினர் அளித்தப் புகாரினைத் தொடர்ந்து அந்தப் பேனர் அகற்றப்பட்டது.

8. வீடியோ: அடித்துச் செல்லப்பட்ட பேருந்து - பயணிகளின் கதி என்ன?

தெலங்கானா மாநிலத்தில், அரசுப் பேருந்து ஒன்று மழை வெள்ளத்தின் சிக்கி அடித்துச்செல்லப்பட்டது. அதிலிருந்த 25 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

9. மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றியால் இந்தியா பெருமை கொள்கிறது- மோடி

பாராலிம்பிக்கில், உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10. பேட்ஸ்மேன்களை வியர்க்க வைக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று (ஆக. 31) அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details