தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

top ten news at 5 pm  top ten news  top ten  tamilnadu news  tamilnadu latest news  etvbharat  செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்  5 மணி செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்  தமிழ்நாடு செய்திகள்
5 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 5, 2021, 4:49 PM IST

1. தொழிற்கல்விபடிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை!

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கு பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.

2. 'பொதுமக்கள் அச்சமின்றி கடைகளில் பொருள்களை வாங்கிச் செல்லலாம்'

தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு அதற்கான சான்றிதழ் வணிகர் சங்கம் சார்பில் வழங்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமின்றி கடைகளில் பொருள்களை வாங்கிச் செல்லலாம் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உறுதி அளித்துள்ளார்.

3. பழங்குடியின செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்

கடந்தாண்டு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பழங்குடியின செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, மும்பையில் உடல் நலக்குறைவினால் காலமானார்.

4. வீடு இழந்த தம்பதிக்கு குடிசை வீடு... மனிதநேய மருத்துவர்

பேராவூரணி அருகே தீ விபத்தில் வீடு இழந்து தவித்த இளம் தம்பதியருக்கு குடிசை வீடு கட்டி கொடுத்து, வீட்டிற்கு தேவையான பொருள்களையும் கொடுத்து, புதுமனை புகுவிழாவை வட்டார மருத்துவ அலுவலர் நடத்தி கொடுத்துள்ளார்.

5. புதுச்சேரியில் சதம் அடித்த பெட்ரோல் விலை

புதுச்சேரியில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்த நிலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

6. நாங்கள் இந்தியா பாகிஸ்தான் இல்லை - பாஜக குறித்து சிவசேனா

சிவசேனா - பாஜக இடையே கருத்து முரண்தான் உள்ளது என இரு கட்சி தலைவர்களும் பரஸ்பரம் தெரிவித்துள்ளனர்.

7. ஏடிஎம் கொள்ளை: 30 வங்கிக் கணக்குகள் முடக்கம்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குத் தொடர்பாக 30 வங்கிக் கணக்குகளை சென்னை காவல் துறையினர் முடக்கியுள்ளனர்.

8. சார்பட்டா திரைப்பட இசைக்கோர்ப்பு நிறைவு

ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

9. இந்தியில் ரீமேக் ஆகும் யு-டர்ன்!

சமந்தா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'யு-டர்ன்' இந்தி ரீமேக்கில் வெளியாகவுள்ளது.

10. 'பதான்' படப்பிடிப்பில் தீபிகா படுகோனே!

ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் 'பதான்' படத்தின் படப்பிடிப்பில் தீபிகா படுகோனே கலந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details