தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top ten news at 11 am  top ten  top ten news  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  news update  today news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  காலை செய்திகள்  11 மணி செய்தி சுருக்கம்  செய்தி சுருக்கம்  காலை 11 மணி செய்தி சுருக்கம்
செய்தி சுருக்கம்

By

Published : Oct 22, 2021, 11:20 AM IST

1. அமித் ஷாவுடன் சந்திப்பா? டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2. மாநில கூட்டுறவுச் சங்கத் தலைவர் வீட்டில் சோதனை!

கூட்டுறவுச் சங்கத் தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.

3. ஜவுளிக் கடைக்கு சீல் வைக்க சென்ற அலுவலர்கள் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்

மயிலாடுதுறையில் கரோனா விதிமுறையை பின்பற்றாத பிரபல ஜவுளிக் கடைக்கு சீல வைக்க சென்ற அலுவலர்களை கடை உரிமையாளர், ஊழியர்கள் நகராட்சி அலுவலர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

4. கனரக வாகனங்கள் இயக்கத்துக்கு லஞ்சம்; லாரி உரிமையாளர்கள் புகார்!

தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் இயக்கத்துக்கு, லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

5. சுங்கத்துறை அலுவலர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு!

சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர் மற்றும் அவரது மனைவி மீது மத்திய புலனாய்வுத் துறையினர் சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

6. சென்னை; காருடன் ரூ.5 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை

சென்னையில் சிகிச்சைக்காக வந்த நபரின் கார், ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

7. வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சென்ற கூடலூர் தலைமை காவலர் பணியிடை நீக்கம்

வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சென்ற கூடலூர் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

8. இரிடியம் மோசடி - காவல் துறை விசாரணை

கோயம்புத்தூரில் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாக கூறி, நூதன முறையில் பணம் மோசடி செய்த கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

9. மளிகைக் கடையில் பெண்ணிடம் செயின் பறிப்பு- சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

கோயம்புத்தூரில் மளிகைக் கடையில் தனியாக இருந்த கடைக்காரப் பெண்ணிடம் செயினை பறித்துச்சென்ற கொள்ளையர்களை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் உதவிகளுடன் தேடி வருகின்றனர்.

10. 26 ஆண்டுகளுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் கோவை சரளா

நடிகை கோவை சரளா 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details