தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்...

top ten news at 11 am  top news  top ten  top ten news  latest news  tamilnadu latest news  tamilnadu news  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய முக்கிய செய்திகள்  முக்கிய செய்திகள்  செய்திச் சுருக்கம்  11 மணி செய்திச் சுருக்கம்  காலை 11 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

By

Published : Jul 26, 2021, 11:13 AM IST

1. பானை மீது நின்று‌ கண்களைக் கட்டிக்கொண்டு சிலம்பம் - மாணவர்கள் அசத்தல்

திருவள்ளூர் அருகே தொடர்ந்து இரண்டு மணி நேரம் பானை மீது நின்று‌ கண்களைக் கட்டிக்கொண்டு மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

2. மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் மெய்யநாதன்

தேசிய வருவாய் வழித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3. காரை துரத்திச் சென்ற காட்டு யானை

மசினகுடி சாலையில் கார் ஒன்றை நெடுந்தூரம் விரட்டிய காட்டு யானையின் வீடியோ வெளியாகியுள்ளது.

4. நேருக்கு நேர் மோதிய பைக் - மூவர் உயிரிழப்பு

திருநெல்வேலியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

5. குழந்தையை கொன்ற தாய் தற்கொலைக்கு முயற்சி

திருச்சியில் ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய், தானும் தற்கொலைக்கு முயன்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6. கரோனா - ஒரே நாளில் 416 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் நேற்று (ஜூலை 25) ஒரே நாளில் 416 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

7. எடியூரப்பா தலைவிதி, இன்று தெரியும்!

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, ஜூலை 26ஆம் தேதி பதவி விலகவுள்ளார் என்று தகவல்கள் வெளியான நிலையில், மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

8. கார்கில் வெற்றி கொண்டாட்டம்!

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் ராணுவ வீரர்கள், வீரத்தீர செயல் விருது வென்ற வீரர்கள், ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் பொதுமக்கள் என பலரும் கார்கில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

9. தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 அதிகரித்து விற்பனையாகிறது.

10. இரண்டாம் சுற்றில் வீழ்ந்த பவானி தேவி!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டின் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி இரண்டாம் சுற்றில் ஏமாற்றம் அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details