தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் - TOP 10 NEWS @ 11 AM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்...

top 10 news at 11 am  top ten news  top 10  latest news  tamilnadu latest news  11 மணி செய்தி சுருக்கம்  செய்தி சுருக்கம்  ஈடிவி பாரத்  ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்
11 மணி செய்தி சுருக்கம்

By

Published : Jun 24, 2021, 10:52 AM IST

1. நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் - தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம்

நீட் தேர்வு முற்றிலுமாக நீக்கப்படவேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2. கொடைக்கானல் பாதரச ஆலை பிரச்சினை: விதிகளை மீறும் ஆலை நிர்வாகம்

கொடைக்கானல் பாதரச ஆலையின் (HUL) அங்கீகாரம் இல்லாத நடவடிக்கையின் காரணமாக கொடைக்கானல் கானுயிர் சரணாலயத்துக்கு ஆபத்து என சிவில் சொசைட்டி செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

3. அம்மாடியோவ்! ஒரு மீனால் லட்சாதிபதியான மீனவர்கள்

மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் தங்க மீன்கள், லட்சம் ரூபாயைத் தாண்டி ஏலம்போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

4. ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.

5. கால்வாய் நீரில் மூழ்கி பொதுப்பணித் துறை அலுவலர் உயிரிழப்பு!

தோவாளை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட பொதுப்பணித் துறை ஆய்வாளர் ராஜேந்திரன் கால்வாயில் வந்த நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

6. பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரம்: மூவர் கைது!

திருநெல்வேலியில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறால் நண்பரை அடித்துக் கொன்றதாக மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

7. போதைக்கு வலி நிவாரணி மாத்திரை விற்பனை: 4 பேர் கைது

வலி நிவாரணி, மயக்க மருந்துக்குப் பயன்படுத்தும் மாத்திரையை போதைக்காக விற்பனைசெய்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

8. கே.ஜி.எஃப். 2 வெளியீடு தேதி எப்போது?

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப். 2 படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

9. ரூ. 1.75 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

10. டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் தீம் பாடல் வெளியானது!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணிக்கான 'தீம்' பாடல் நேற்று(ஜூன்.23) அறிமுகம் செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details