தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11am - நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11am
11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11am

By

Published : Jun 8, 2020, 11:07 AM IST

Updated : Jun 8, 2020, 11:25 AM IST

பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் - ஸ்டாலின்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

'அதைச் செய்தவுடன்' மவுலானா சாத்திடம் விசாரணை! - டெல்லி குற்றப்பிரிவு

டெல்லி: மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்தவுடன் டெல்லி சமய மாநாட்டை ஒருங்கிணைத்த மவுலானா சாத் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஐவருக்குக் கரோனா!

சென்னை: தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் உயர் அலுவலர் உள்பட ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காவலர் கொலை வழக்கில் திருப்பம்: பயங்கரவாதிகளுடன் தொடர்பா?

கன்னியாகுமரி: சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இருவரும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலை: தொடரும் ரத்தவெறி! பக்... பக்... பெரம்பலூர்!

பெரம்பலூர்: நேற்றிரவு (ஜூன் 7) பிரபல ரவுடி பெரம்பலூர் நகரில் கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்டார். தொடரும் கொலைச் சம்பவங்களால் பெரம்பலூர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

திருப்பதி கோயில் குறித்து அவதூறு: நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு!

திருப்பதி: திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகப் பழம்பெரும் நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மைசூரு குடியிருப்புப் பகுதியில் பறக்கும் பாம்பு!

மைசூரு: குடியிருப்புப் பகுதியில் அரியவகை பறக்கும் பாம்பு ஒன்று தென்பட்ட சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடையச் செய்தது.

உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 10ஆயிரம் உயிரிழப்புகள் கரோனா வைரஸ் தொற்றால் நிகழ்ந்துள்ளன. ஐரோப்பாவில் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பிரேசில் அரசு கரோனா வைரஸ் இறப்புகள் மற்றும் தொற்றுநோய் பாதித்தவர்களின் விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது.

வாஷிங்டன் நகரத்திலிருந்து தேசிய காவல் படை வெளியேற ட்ரம்ப் உத்தரவு

தேசிய காவல் படையினரை வாஷிங்டனிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Last Updated : Jun 8, 2020, 11:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details