சென்னை: 15 கேள்விகளுக்கு பதில் அளித்து டாப் இரண்டு இடங்களில் இருப்பது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் , மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் என்றார் சபாநாயகர்.
பின் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் 14 வினாக்களுக்கு விடையளித்து இருக்கிறார்.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலா 13 வினாக்களுக்கு விடையளித்து உள்ளனர். அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு 12 வினாக்களுக்கு விடையளித்து இருக்கிறார், எனக்குறிப்பிட்டார் சபாநாயகர் அப்பாவு.
நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்டமுன்வடிவுகள்:நீட் தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும் வகையில் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.