தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news
top-10-news

By

Published : Nov 10, 2021, 12:59 PM IST

1. சென்னை மக்களே... கவனமாக இருங்க - அலர்ட் கொடுக்கும் தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை - கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களிலும், அதனைச் சுற்றியுள்ள, பகுதிகளிலும் நாளை பிற்பகல் வரை மிக கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

2. நவ.13-ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு?

நவ.13ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. Watch video: பழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

4. கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு

அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

5. மணவாழ்க்கையைத் தொடங்கிய மலாலா!

பெண்களின் உரிமைகளுக்காக போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த அசீர் மாலிக் என்பவரை கரம்பிடித்தார்.

6. மீனாட்சி கோயிலில் கோலாட்ட உற்சவம் - ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சுவாமி

மீனாட்சியம்மன் கோயிலில் ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று (நவ.9) சுவாமியும், அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

7. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் : 4-வது நாளாக ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணி தீவிரம்

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை இரண்டு தினங்களாகத் தேடி வந்த நிலையில் இன்று 4-வது நாளாக ட்ரோன் கேமரா மூலமாகச் சிறுவனைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

8. ஆதாரவற்றவர்களின் வாரிசு: பத்ம‌ஶ்ரீ மூலம் அயோத்திக்கு பெருமை சேர்த்த ஷெரீப் சாச்சா!

கடந்த 25 ஆண்டுகளாக ஆதரவற்று இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்து அளப்பரிய பணியை மேற்கொண்டு வரும் ஷெரீப் சாச்சாவுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

9. பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் மறைவு

நடன இயக்குநர் கூல் ஜெயந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நவம்பர் 10) உயிரிழந்தார்.

10. இதயங்களைத் தொடர்ந்து வென்றெடுக்கும் 'ஜெய் பீம்'

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details