தமிழ்நாடு

tamil nadu

காலை 7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

By

Published : Aug 20, 2021, 7:31 AM IST

Published : Aug 20, 2021, 7:31 AM IST

top-10-news
top-10-news

1.வளர்ச்சிக்கு சாதி தடையாக இருக்க கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சாதியைக் காரணம் காட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் மாஸ்க்: ’இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு அபராதம்!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தியதால் ’இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

3.திரையரங்கு திறப்பு எப்போது? - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்

தமிழ்நாட்டில் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

4.திமுக 100 நாள் ஆட்சி சாதனை அல்ல, சோதனை; குற்றச்சாட்டுகளை அடுக்கும் எடப்பாடி பழனிசாமி

கோடநாடு வழக்கில் தன்னை சேர்க்க சதி நடந்து வருவதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

5.வேளாண் பட்ஜெட்டில் பனை வளர்ச்சித் திட்டங்கள்.. தமிழ்நாடு அரசுக்கு குமரி அனந்தன் பாராட்டு

வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம் வழங்கியதற்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

6.இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 20

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.

7.பைக் மீது கார் மோதி விபத்து - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு பிரிவில் திண்டுக்கல்லில் இருந்து, வேடசந்தூர் நோக்கி இருசக்கர வாகனம்- கார் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி காணொலி.

8.ஜம்மு காஷ்மீரில் ஆப்னி கட்சித் தலைவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்கள் கொல்லப்படுவது தொடர் கதையாகிவருகிறது. இன்று (வியாழக்கிழமை) ஆப்னி கட்சித் தலைவர் குலாம் ஹாசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

9.எம்.பிக்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டித்து 5,000 இடங்களில் மக்கள் நாடாளுமன்ற இயக்கம்

நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாட்டில் 5,000 இடங்களில் மக்கள் நாடாளுமன்ற இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

10.மறுபடியும் முதலில் இருந்தா? புது தாலியுடன் வனிதா விஜயகுமார் செல்ஃபி

பிக்கப் டிராப் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார் . அதை பார்த்த நெட்டிசன்கள் மறுபடியும் முதலில் இருந்தா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details