தமிழ்நாடு

tamil nadu

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 11, 2020, 11:02 AM IST

Published : Jun 11, 2020, 11:02 AM IST

Top 10 news etvbharat
Top 10 news etvbharat

1.தமிழ்நாட்டிற்குள் ஆர்ப்பரித்து நுழைந்தாள் காவிரித்தாய்!

கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்தது.

2.வெட்டுக்கிளித் தாக்குதல்: அலுவலர்களை முடுக்கிவிட்ட தெலங்கானா முதலமைச்சர்!

ஹைதராபாத்: தெலங்கானாவில் வெட்டுக்கிளித் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால், அதனைச் சமாளிக்க அரசு அலுவலர்கள் எச்சரிக்கையுடனும் தயாராகவும் இருக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

3.வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளைப் பார்க்க உக்ரைன் வந்த தம்பதிகள்!

கீவ்(Kyiv): ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் தவித்துவந்த தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளைப் பார்க்க உக்ரைன் வந்துள்ளனர்.

4.தண்ணீரில் நடக்கும் வித்தையை என் யூடியூப் சேனலில் பாருங்க

தண்ணீரில் நடக்க பயிற்சி செய்து வந்த நடிகர் வித்யூத் ஜம்வால் அந்த சாகசத்தை முதல் முதலாக தனது யூடியூப் சேனலில் செய்து காட்டவுள்ளார்.

5. மாமியார் மருமகள் தகராறு: மகனை கொலைசெய்த தாய்!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் மகனை கொலைசெய்த தாய் தற்கொலைக்கு முயன்று மருத்துத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

6. சீனாவில் பெருவெள்ளம்: 2.28 லட்சம் பேர் வெளியேற்றம்!

பெய்ஜிங்: மத்திய, தென் சீனாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக ஏறக்குறைய இரண்டு லட்சத்து 28 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

7. நளினியுடன் பேச அனுமதிக்குமாறு 11ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர்: தனது மனைவி நளினியுடன் காணொலி அழைப்பில் பேச அனுமதி கோரி வேலூர் மத்திய சிறையில் 11ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகிறார்.

8. 'மாளிகையின் நிறத்தை மாற்றி, ஒரு பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்'

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தைத் தொடர்ந்து நிறவெறிக்கு எதிராகவும் இன பாகுபாட்டுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதில் தனது பங்கை அளிக்கும் பொருட்டு கவிப்பேரரசு வைரமுத்து பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

9.கிறிஸ்தவ பெண்ணைக் கடத்திய இஸ்லாமிய ஆண்கள் மீது புகார்!

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரின் யுஹானாபாத் பகுதியில் கிறிஸ்தவ சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற இஸ்லாமிய ஆண்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

10.தூத்துக்குடியில் கத்திக்குத்தில் காயமடைந்த காவலர் உயிரிழப்பு!

தூத்துக்குடி: காவலர் ஒருவர் மற்றொரு காவலரைக் குத்தியதில் காயமடைந்த அவர், இன்று (ஜூன் 11) உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details