தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9pm - ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @9pm
Top 10 news @9pm

By

Published : Feb 23, 2021, 9:14 PM IST

உற்பத்திசார் திட்டங்கள் இந்தியாவை புதுமையின் பாதையில் கொண்டுசெல்லும்: அமிதாப் கந்த்

மத்திய அரசின் உற்பத்திசார் திட்டங்கள் இந்தியாவை புதுமையின் பாதையில் கொண்டுசெல்லும் என நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் கந்த் கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68ஆக உயர்வு; 134 பேர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமா ஏற்பு

முதலமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

சர்வதேச சந்தையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்: மத்திய அமைச்சர் விளக்கம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் இல்லை: எல்.முருகன்

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஊர் காவல் படையினர் பணி அரசாணை: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ஊர் காவல் படையினருக்குப் பத்து நாள் மட்டுமே பணி என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படும் - திருமாவளவன் எம்பி

பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புயல் நிவாரண நிதி மோசடி வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

புயல் நிவாரண நிதி 110 கோடி ரூபாயை தகுதியில்லாதவர்கள் பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகலிரவு டெஸ்ட்: எந்த பந்தை உபயோகிப்பது என்ற ஆலோசனையில் பிசிசிஐ!

பகலிரவு டெஸ்ட் போட்டியில் உபயோகிக்கப்படும் பந்து குறித்த ஆலோசனையில் பிசிசிஐ இறங்கியுள்ளது.

'டெடி'யுடன் அதிரடியில் இறங்கிய ஆர்யா: 'டெடி' பட ட்ரெய்லர் வெளியீடு!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'டெடி' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details