தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Feb 16, 2021, 9:25 PM IST

1 பிப்ரவரி 28ஆம் தேதி அமித் ஷா தமிழ்நாடு வருகை

சென்னை: பிப்ரவரி 28ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகிறார்.

2 யுபிஎஸ்சி ஆர்வலர்களுக்கு 'ஸ்மார்ட் டெஸ்ட் சீரிஸ்' - ஐஐடி மெட்ராஸின் புதிய முயற்சி!

சென்னை: ஐஐடி மெட்ராஸின் எடு-டெக் (EdTech) ஸ்டார்ட்அப் எக்செல்ஆன் அகாடமி, யு.பி.எஸ்.சி ஆர்வலர்களுக்காக ஆன்லைனில் 'ஸ்மார்ட் டெஸ்ட் சீரிஸ்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

3 தேர்தல் பரப்புரைக்காக புதுவை வருகிறார் மோடி!

புதுச்சேரி: தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற பிப்.25ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளதாக பாஜக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 சசிகலாவை சந்திக்க வாய்ப்பில்லை: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டம்

234 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும், தான் சசிகலாவை சந்திக்க வாய்ப்பில்லை எனவும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

5 காலி பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: வனத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு!

மதுரை: தமிழ்நாடு வனத் துறையில் வனப் பாதுகாவலர், வனப் பார்வையாளர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

6 பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியிட்டு தேர்தல் வாக்குப்பதிவை ஏப்ரல் கடைசி வாரத்தில் ஒரே கட்டமாகவும், வாக்கு எண்ணிக்கையை மே 10ஆம் தேதிக்குள் முடிக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 நாட்டின் அமைதியை குலைக்க அந்நிய சக்திகள் முயற்சிக்கின்றன' - உள்துறை இணை அமைச்சர்

டெல்லி: நாட்டின் அமைதி தன்மையை அழிப்பதற்கு அந்நிய சக்திகள் விரும்புவதாகவும், குறிப்பாக டெல்லியை மையமாக வைத்துச் செயல்படுவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

8 காதலர் தினத்தில் உலகெங்கும் ரோஜாக்களை அனுப்பிய பெங்களூரு கார்டன் சிட்டி!

பெங்களூரு: காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள 41 இடங்களுக்கு சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் கிலோ ரோஜாக்கள் பெங்களூரு கார்டன் சிட்டியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

9 மக்களை கசக்கிப் பிழிகிறது மத்திய அரசு! - வைகோ கண்டனம்!

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்காமல் மக்கள் மீது சுமையை ஏற்றுவதில் போட்டி போடுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

10 சிவாஜி பட நடிகையின் நிலத்தை மோசடி செய்த நபர் கைது!

சிவாஜி பட நடிகையின் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details