தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm - மக்களவையில் ராகுல்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்...

Top 10 news @ 9pm
Top 10 news @ 9pm

By

Published : Feb 11, 2021, 9:04 PM IST

விவசாயிகளின் போராட்டம் அல்ல.. நாட்டு மக்களின் எழுச்சி இயக்கம்- ராகுல் காந்தி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் நாட்டில் விவசாய சந்தைகளை (மண்டி) ஒழித்துக்கட்டிவிட்டு பதுக்கலுக்கு வழிவகுக்கும் என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் இது விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல.. நாட்டு மக்களின் எழுச்சி இயக்கம் என்றும் வர்ணித்தார்.

ட்விட்டருக்கு மாற்றாகுமா ‘கூ’ செயலி - படையெடுக்கும் அரசுத் துறை கணக்குகள்!

அரசின் அதிகாரங்களுக்கு அடிபணிய மறுக்கும் ட்விட்டர் தலைமையின் செயல்பாடுகளை அடுத்து, அரசுத் துறையின் கணக்குகள் ‘கூ’ செயலியின் மீது கவனத்தைச் செலுத்தியுள்ளது. அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மெருகேற்றப்பட்ட ‘கூ’ செயலி, டிவிட்டர் பக்கத்திற்கு மாற்றாக இந்தியாவில் களமாடத் தொடங்கியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி: களைகட்டிய சேப்பாக்கம்!

சென்னை: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் காண ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்த ரசிகர்களுக்கு, இன்று நேரடியாக டிக்கெட்டுகளை வழங்கும் பணி தொடங்கியது.

மக்களவையில் ராகுல், அனுராக் காரசார வாதம்!

மக்களவையில் ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டுக்கு அனுராக் தாகூர் பதில் அளித்தார்.

பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மக்களின் குறைகளை கேட்கிறது - கனிமொழி

திருப்பூர்: திமுக பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு வருகிறோம் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.

டிராக்டர் பேரணியில் விவசாயி உயிரிழப்பு: அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: டிராக்டர் பேரணியில் விவசாயி உயிரிழப்பு தொடர்பான முழு விசாரணையை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு டெல்லி காவல் துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பந்தின் தரத்தில் பிரச்னை: தரத்தை ஆராயுமாறு பிசிசிஐ கோரிக்கை!

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்பட்டு வரும் கிரிக்கெட் பந்துகளின் தரத்தை ஆராயுமாறு பந்து உற்பத்தியாளர்களான சான்ஸ்பரேல்ஸ் கிரீன்லாண்ட்ஸிடம்(எஸ்.ஜி) பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

தூத்துக்குடியில் போலி வைரத்தை விற்க முயன்றவர்கள் கைது!

தூத்துக்குடி : 27 லட்சம் ரூபாய்க்கு போலி வைரத்தை விற்க முயன்ற இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தை மறைச்சு வைக்கிற இடமா அது.... அதிர்ந்துபோன அலுவலர்கள்

கோயம்புத்தூர்: விமான நிலையத்தில் மலக்குடலில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2.85 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஆயிரத்து 747 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பார்வையற்றவராக நடித்துள்ள பிரபல இயக்குநர்

நடிப்பில் கலக்கி இயக்குநர்களில் ஒருவராகத் திகழும் சுப்ரமணியம் சிவா, அம்மா உணவகம் படத்தில் இடம்பெறும் தத்துவ பாடலில் பார்வையற்றவராக நடித்துள்ளராம்.

ABOUT THE AUTHOR

...view details