தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திகள் Top 10 news @9 PM - சர்வதேசம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top ten news
top ten news

By

Published : Dec 26, 2020, 9:09 PM IST

'ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அஜிங்கியா ரஹானே கேப்டன்ஷிப்'- விவிஎஸ் லட்சுமணன் பாராட்டு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அஜிங்கியா ரஹானே கேப்டன்ஷிப்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விவிஎஸ் லட்சுமணன் பாராட்டியுள்ளார்.

மின்வேக்ஸ் நிறுவனத்தின் வெப்பத்தைத் தாங்கக் கூடிய கோவிட்-19 தடுப்பூசி

பெங்களூரு:அறை வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தக் கூடிய கரோனா தடுப்பு மருந்தை, மின்வேக்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த லாரி - இருவர் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி

கட்டுப்பாட்டை இழந்த கண்டைனர் லாரி சாலை ஓரத்தில் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தில் மோதி அங்கிருந்த இருந்த லாட்டரி கடைக்குள் புகுந்தது.

தமிழ்நாட்டில் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் பண்டிகை கால 20 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! - தமிழக அரசு வெளியீடு!

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள காளை உரிமையாளர், மாடுபிடி வீரர்களுக்கு கரோனா இல்லை என்ற மருத்துவச்சான்று கட்டாயம் என அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசம் தாவாங் பகுதியில் இந்திய - திபெத் எல்லைக் காவல் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் என்ன யூதாஸா? - வைகோ ஆவேசம்!

சென்னை: அதிமுகவை விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பார் எனக் கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன யூதாஸா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் மூன்றாவது கட்ட பரப்புரை: நாளை தொடக்கம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது மூன்றாவது கட்ட பரப்புரையை நாளை (டிச.27) திருச்சியில் தொடங்குகிறார். தொடர்ந்து 30ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பரப்புரை செய்கிறார்.

சீமானை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!

கோவை: நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த சீமானை கண்டித்து, விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கேரளாவில் மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

கேரளாவில் மரபணு மாற்றமடைந்த கரோனா தொற்று பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details