தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @ 9AM
Top 10 news @ 9AM

By

Published : Sep 30, 2021, 9:02 AM IST

1.காற்று மாசால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள காத்திருக்கும் சென்னை - சி40 எச்சரிக்கை!

அனல்மின் நிலையங்களால் ஏற்படும் காற்று மாசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி வருவதாக C40 நகரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள (Coal-free cities: the health and economic case for a clean energy revolution) அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2. அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த முதலமைச்சர்

சேலம் தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

3. மாநகராட்சி குழந்தைகள் மையங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

குழந்தைகளை அன்புடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு குழந்தைகள் மைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

4. ’போலி உத்தரவுக்கு பணம் கொடுத்தவர்கள் புகார் அளியுங்கள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு வேலை வாங்கித் தருவதாக போலி உத்தரவைக் கொடுத்து பணத்தை ஏமாற்றியவர்கள் குறித்து இளைஞர்கள், பெற்றோர் ஆகியோர் தைரியமாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

5. அக்.1 முதல் பாண்டியன் பல்லவன் வைகை ரயில்களின் நேரம் மாற்றம்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் பாண்டியன், பல்லவன், வைகை ஆகிய சிறப்பு ரயில்களில் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

6. 'நம்மை வளரவிடாமல் தடுக்க சதி' - சீமான்

நம்மை வளரவிடாமல் தடுப்பதற்கு திமுகவும். அதிமுகவும் ஒன்றாக இணைந்து வேலை செய்கின்றன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

7. மாநகராட்சிகளில் வசூல் செய்யப்படாமல் நிலுவையாக உள்ள வரி பாக்கி - ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்

சென்னை, கோவை தவிர தமிழகத்தில் உள்ள 13 மாநகராட்சிகளில் பெருமளவு தொகை வரி பாக்கியாக உள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக 60 விழுக்காடு வரி கட்டணம் மாநகராட்சியால் வசூல் செய்யப்படாததால் வளர்ச்சிப் பணிகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

8. சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் பாலம் - அமைச்சர் எ.வ.வேலு

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

9. துனிசியாவில் முதல் பெண் பிரதமர் தேர்வு

அரசியல் குழப்பம் மிக்க துனிசியாவில் ரவோதா போடன் ரோம்தானே என்பவர் முதல் பெண் பிரதமராகத் தேர்வாகியுள்ளார்.

10. IPL 2021: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ABOUT THE AUTHOR

...view details