தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @ 9AM
Top 10 news @ 9AM

By

Published : Sep 26, 2021, 9:06 AM IST

1. ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி - கடும் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

மனமிருந்தால் போதும் எதையும் வெல்லலாம் என குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாற்றுத் திறனாளி ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

2. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் பாராட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

3. பட்டியலின வேட்பாளரை மிரட்டிய திமுக - கமல் கண்டனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிற கட்சி வேட்பாளர்களை மிரட்டி வேட்புமனுக்களை திரும்பப்பெறச் செய்யும் செயல்களில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

4. அழிவை நோக்கி செல்லும் வைகையை காப்பாற்ற வேண்டியது அவசியம் - தண்ணீர் மனிதர்

பல்வேறு சூழல் காரணமாக மதுரையின் அடையாளமாக திகழும் வைகை தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனைக் காப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

5. நக்சல்களால் பாதித்த மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பத்து மாநில முதலமைச்சர்களுடன் ஒன்றிய உள்துறை அமித் ஷா ஆலோசனை மேற்கொள்கிறார்.

6. கேரள பாஜக தலைவராகிறார் நடிகர் சுரேஷ் கோபி?

கேரள மாநில பாஜக தலைவராக நடிகர் சுரேஷ் கோபி நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7. இணையத்தில் வைரலாக பறந்துவரும் சினேகா துபே - யார் இவர்?

ஐநா மன்றத்தில் இந்திய தரப்பில் தனது வாதத்தை முன்வைத்த மன்றத்தின் இந்திய முதன்மை செயலாளர் சினேகா துபே, இணையத்தில் அதிகம் தேடப்படும் நபராக மாறியுள்ளார். இவரது ஐநா மன்ற உரை இந்தியர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. 90 வயதில் கார் ஓட்ட கற்றுக்கொண்டு அசத்திய பாட்டி

மத்திய பிரதேசத்தில் 90 வயது பாட்டி ஒருவர் காரை ஓட்டி அசத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

9. துருவ் குண்டு: 12 வயதில் நாட்டுக்காக வீர மரணமடைந்த சிறுவன்

தாய் நிலத்தை நேசிக்க வயது தடையல்ல என்பதை உணர்த்திவிட்டுச் சென்றவர் துருவ் குண்டு, அவர் குறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு.

10. SRH vs PBKS: கடைசி ஓவர் வரை பரபரப்பு; இம்முறை பஞ்சாப் வெற்றி

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த போட்டியைப் போலவே கடைசி ஓவர்வரை பரபரப்பாக கொண்டு பஞ்சாப் அணி, இம்முறை வெற்றிபெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details