தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் - ஈடிவி பாரத் காலை 9 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்...

Top 10 News @ 9AM
Top 10 News @ 9AM

By

Published : Jul 22, 2021, 9:07 AM IST

1. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கரூரில் உள்ள அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

2. போதும்டா சாமி - வாய்திறந்தது பெகாசஸ் செயலியின் என்எஸ்ஓ குழுமம்

பெகாசஸ் செயலி குறித்து எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊடகத்தின் அவதூறு பரப்புரை என என்எஸ்ஓ குழுமம் தெரிவித்துள்ளது.

3. ஓபிசி வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மைச் செயலாளர் கடிதம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெறும் வகையில் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அரசு முதன்மைச் செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

4. சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித்தேர்வு தேதி அறிவிப்பு

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான தனித்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

5. ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்கு மதுரை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு? - மாநகராட்சி சுற்றறிக்கையால் சர்ச்சை

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வர இருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மாநகராட்சி சார்பாக ஏற்பாடுகள் செய்வது குறித்து வெளியான சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

6. இ-சேவை மையங்களில் தவறு நிகழ்ந்தால் அனுமதி ரத்து - வருவாய்த் துறை அமைச்சர்

தவறுகள் நடக்கும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்துசெய்யப்படுவதோடு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

7. பிஆர்க் படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேராத அவலம்

கடந்த 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக் கழகத்தில் பிஆர்க் பட்டப்படிப்பில் அரசு பள்ளியில் படித்த ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட இடங்களும், 118 இடங்களில் இருந்து 66 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

8. பாலியல் வழக்கில் மாட்டிக்கொண்ட கேரள அமைச்சர்- ஆடியோ வெளியானதால் பரபரப்பு

கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.

9. TNPL 2021: திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த மலைக்கோட்டை; திருச்சி முதலிடம்

நெல்லை - திருச்சி அணிகளுக்கு இடையே டிஎன்பிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10. #HBD கூர்கா நாயகன் யோகிபாபு..!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளான இன்று (ஜூலை 22) ரசிகர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details