தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் - etv bharat news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

top 10 news@9AM
top 10 news@9AM

By

Published : Jul 12, 2021, 9:40 AM IST

1. அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்: புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடக்கம்!

புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணிக்கு அமலுக்கு வந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு 70 நாள்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2. மேகதாது அணை பிரச்னை தொடர்பாக இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

மேகதாது அணை பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

3. பக்தர்களின்றி பூரி ரத யாத்திரை தொடங்கியது!

பூரி ஜெகந்நாத் ஆண்டு ரத யாத்திரை தொடங்கியது. கோவிட் ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.

4. பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இன்று முதல் இலவச பயணச்சீட்டு

அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இன்று முதல் இலவச பயணசீட்டு வழக்கப்படும் என போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

5. சத்ருகன் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸில் இணைகிறார்?

நடிகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6. 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்கால்!

நன்னிலம் அருகே 15 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் புதர் மண்டி இருக்கும் பெரிய வாய்க்காலைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7. ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

8. ஓடும் பேருந்தில் மாரடைப்பு - உயிர் பிரியும் போதும் பயணிகளை காத்த ஓட்டுநர்

கோபிசெட்டிப்பாளையம் அருகே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் நேரத்திலும், பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளின் உயிரை ஓட்டுனர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9. நான் ஜெயிச்சதும் வந்துடுச்சு வலிமை அப்டேட் - வானதி சீனிவாசன்

சட்டப்பேரவை தேர்தலில் தான் வெற்றி பெற்றவுடன் வலிமை திரைப்படத்தின் அப்டேட் வந்துவிட்டதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

10. புதிய சாலையில் வளைந்த கோடு - யாருப்பா அந்த பெயிண்டரு? மீம்ஸின் உண்மை பிண்ணணி

புதிய சாலையில் வளைந்த கோடுகள் வரையப்பட்டது தொடர்பாக வெளியான மீம்ஸ் குறித்த உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details