தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @9AM - Top 10 news@9AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @9AM
9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @9AM

By

Published : Jul 3, 2021, 9:33 AM IST

இணையதள விளையாட்டிற்கு அடிமையான இளைஞர்கள்: டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை!

தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு, இணையதள விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களுக்கு அறிவுரை வழக்கும் வீடியோப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் இரவோடு இரவாக ராஜினாமா- இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்!

உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) இரவோடு இரவாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் டேராடூனில் நடைபெறுகிறது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்த வழிமுறைகள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

கரோனா தொற்று அதிகளவில் பரவுவதை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சில வழிமுறைகளை அறிவித்துள்ளது.கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான கரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

லோன் வாங்கித் தருவதாக கூறி ரூ1.6 கோடி மோசடி!

சென்னையில் லோன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 1.6 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

’சுந்தரா டிராவல்ஸ்’ ஹீரோயின் போலீசில் புகார்!

கொலை மிரட்டல் விடுத்த தன் கணவர் வசந்தராஜா மீதும், அவருக்கு ஆதரவாக செயல்படும் உதவி ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி பரங்கிமலை இணை ஆணையரிடம் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.+

இருளில் தவிக்கும் மக்கள் - சித்துவின் மின்சார கட்டண பாக்கியோ ரூ. 8 லட்சத்திற்கும் மேல்!

மின்சார தேவை நெருக்கடியால் பஞ்சாப் மாநிலத்தில் அரசு அறிவித்துள்ள மின் தடையை கடுமையாக விமரிசித்துவரும் காங்கிரஸ் அதிருப்தி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, 9 மாதமாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரூ. 8 லட்சத்து 50ஆயிரத்திற்கும் மேல் மின் கட்டண தொகை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் தற்போது கசிந்துள்ளது

5 ஸ்டார் நாயகி நடிகை கனிகா!

தமிழ் திரையுலகில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி தனக்கென ஓர் இடம்பிடித்த நடிகை கனிகா இன்று (ஜூலை 3) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பில்லா குடிநீர் - ஆய்வில் தகவல்

உலகில் நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பு இல்லாத குடிநீர்தான் கிடைப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details