தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தை பார்க்கலாம்.

Top 10 news @ 9am
ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

By

Published : Mar 11, 2021, 9:17 AM IST

ராகுல் காந்தி கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை- கைலாஷ் விஜய்வர்ஜியா!

ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை என பாஜக மூத்தத் தலைவர் கைலாஷ் விஜய்வர்ஜியா கூறினார்.

கடுமையாக காயமுற்ற மம்தா பானர்ஜி- மருத்துவ அறிக்கை பகீர்!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'கல்யாணத்துக்கு பொண்ணு கண்டுபிடித்துத் தர முடியுமா'... போலீஸிடம் கேட்ட உ.பி., வாசி!

திருமணத்திற்கு மணமகளைக் கண்டுபிடிக்க உதவுமாறு, உ.பி., வாசி ஒருவர், காவல் நிலையத்திற்குச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

'வேட்பாளர்கள் விளம்பரம் செய்ய அனுமதி பெற வேண்டும்' - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்னர் மாவட்ட ஊடக சான்றளிப்பு கண்காணிப்புக் குழுவில் அனுமதி பெற்று, அந்த அனுமதி எண்ணுடன் விளம்பரங்களை வெளியிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் அறிவித்துள்ளார்.

மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் எம்எல்ஏ : அதிமுகவினர் கொண்டாட்டம்!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட தற்போதைய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள மதனந்தபுரம் கே.பழனியிற்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

'பேரறிஞர் அண்ணாவின் முழக்கத்தை பறிகொடுத்தவர்கள் திராவிடக் கட்சிகள்’ - சீமான் சாடல்

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தை பேரறிஞர் அண்ணா முன் வைத்தார். ஆனால் மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் மொத்தமாக பறிகொடுத்தவர்கள் திராவிடக் கட்சிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் வெளியாகியுள்ளன.

இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் பொதுச்செயலரை கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள்!

இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் பொதுச்செயலரை, அலுவலகத்தில் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் சரமாரியாக குத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் மூக்கில் குத்திய சோமேட்டோ ஊழியர் கைது!

ஃபுட் ஆர்டரை ரத்து செய்த பெண்ணின் மூக்கில் குத்திய சோமேட்டோ டெலிவரி பாயை, காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில்லரை காசுக்காக யாசகம் பெறுபவரை கொலை செய்த கஞ்சா கும்பல்!

குளச்சல் அருகே சில்லரை காசுக்காக கஞ்சா கும்பல் யாசகம் பெறும் மாற்று திறனாளியின் தலையை சிதைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details