தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - Tamil top news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 new
Tamil top news

By

Published : Sep 4, 2020, 9:42 AM IST

தமிழ்நாட்டிற்கு வந்த கோவிட்ஷீல்டு தடுப்பூசி:

கரோனா வைரஸ் தடுப்பூசி பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் போடப்பட்டு, தன்னார்வலர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் எனப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

'கரோனா வைரஸ் எதிர்பாராதது; நாட்டின் பின்னடைவு'- பிரதமர் நரேந்திர மோடி:

கரோனா வைரஸ் தொற்று எதிர்பாராதது, நாட்டின் பின்னடைவு, இது சுகாதாரம் மற்றும் பொருளாதார அமைப்புகளை சோதித்து வருகின்ற போதிலும், நாட்டு மக்களின் விருப்பங்களை பாதிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

'சீனாவின் ஊடுருவலை அனுமதிக்க முடியாது' - ஹிமாச்சல் முதலமைச்சர்:

எல்லையில் சீனா ராணுவத்தின் ஊடுருவலை இந்தியா அனுமதிக்காது என ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 77 நபர்களுக்கு மனநோய்! :

தமிழ்நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 14 ஆயிரத்து 707 பேரில் 77 நபர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய குற்றப்பதிவு ஏடுகள் பணியகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

முசோரி கன் ஹில் - வரலாற்று சிறப்புமிக்க இடம் ஒரு பார்வை :

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முசோரியின் வரலாற்று சிறப்புமிக்க துப்பாக்கி மலை பற்றி விவரிக்கிறது இக்காணொலி...

மலப்புரம் புரட்சியுடன் தொடர்புடைய ரயில் நிலையத்துக்கு குவியும் பாராட்டுகள்! :

இந்த ரயில் நிலையத்துக்கு புரட்சிகர வரலாற்றுத் தொடர்பு உள்ளது. 1921ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அராஜகத்தை எதிர்த்து மலப்புரம் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து போராடத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட 100 கிளர்ச்சியாளர்கள் இங்கிருந்துதான் பெல்லாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எஸ்பிபி உடல்நிலை குறித்து நல்ல செய்திவரும் -எஸ்பிபி சரண்! :

எஸ்பிபி உடல்நிலைக் குறித்து திங்கள்கிழமை நல்ல செய்திவரும் என் அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வினாடி வினா போட்டியில் 2ஆம் இடம் பிடித்த 7 வயது சிறுமி..!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, சர்வதேச வினாடி வினா போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்திய வங்கிச் செயலிகளில் ஐ.சி.ஐ.சி.ஐ. மட்டும் தான் டாப் :

இந்திய வங்கிகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிச் செயலி மட்டுமே சிறப்பான சேவைத் தருவதாக ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

’இந்தியா தங்கம் வென்றதில் எனக்கும் பங்கு இருப்பது மகிழ்ச்சி’ - செஸ் வீரர் பிரக்ஞானந்தா :

முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றதில் தனக்கும் பங்கு இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக செஸ் வீரர் பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details