தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 24, 2020, 8:56 AM IST

etv bharat  9 AM news
etv bharat 9 AM news

நாமக்கல்லில் உயிரி எரிவாயு உற்பத்தி ஆலை: முதலமைச்சர் தொடங்கிவைப்பு

சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் நாமக்கல்லில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான கம்பிரஸ்டு பயோ கேஸ் (Compressed Bio gas CBG) எனப்படும் உயிரி எரிவாயு உற்பத்தி ஆலையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.

'பள்ளிகள் திறக்கப்படும்போது சுழற்சி முறையில் வகுப்புகள்; குழு பரிந்துரையின்படி முடிவு'

பள்ளிகள் திறக்கப்படும்போது சுழற்சி முறையில் வகுப்புகளைச் செயல்படுத்துவது குறித்து அரசு அமைத்துள்ள குழு பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் இறப்பு: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

தூத்துக்குடி: சிறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணியாற்றும் உதவி ஆணையர் அபய் குமார் மிஸ்ராவின் பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் உதவி ஆணையரின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களிடமிருந்து பணத்தைத் திருடும் முயற்சி நடைபெற்றுள்ளது.

'இந்திய-சீன பிரச்னையைத் தீர்க்க மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படாது' - ரஷ்யா

இந்திய, சீன நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்னையைத் தீரக்க மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படாது என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் பறிமுதல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் ஹர்வான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுக்கிவைத்திருந்த ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல்செய்தனர்.

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவு!

மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து எந்தத் தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.

நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழிக்கு கரோனா!

நடிகை சமந்தாவின் தோழி தனக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்துள்ளார்.

வெள்ளையர்கள் உயிரும் முக்கியம் பர்ன்லி - வானில் பறந்த பேனரால் சர்ச்சை!

இங்கிலீஷ் ப்ரிமியர் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பர்ன்லி ரசிகர்கள் வெள்ளையர்கள் உயிரும் முக்கியம் என்ற பேனரை வானில் பறக்கவிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

சீன நிறுவனங்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்பு, பயனடையும் சாம்சங் நிறுவனம்!

இந்திய சீன ராணுவங்களுக்கு இடையேயான மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்பு உணர்வால் சாம்சங் நிறுவனம் அதிகம் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details