தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - etv bharat top 10 news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-9am
top-10-news-at-9am

By

Published : Jun 20, 2020, 9:01 AM IST

லடாக் வன்முறை: தயார் நிலையில் இந்திய போர் விமானங்கள்!

டெல்லி: விமானப் படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ். பதௌரியா ஜம்மு காஷ்மீர், லே பகுதிகளுக்குச் சென்று அனைத்து விமான நிலையங்களிலும் ஆய்வு நடத்தினார்.

மாநிலங்களவைத் தேர்தல்: ஜெகன் அலை, நாயுடு காலி!

அமராவதி: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆந்திராவிலுள்ள நான்கு இடங்களிலும் ஜெகன் மோகன் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

பூரி ரத யாத்திரைக்கு அனுமதி கோரி மனு!

புவனேஸ்வர்: பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்டுள்ள மனு திங்கள்கிழமை (ஜூன்22) பட்டியலிடப்பட உள்ளது.

ஹைதராபாத் ஐஐடி நுழைவுத்தேர்வு: ஹால்டிக்கெட்டையே இ-பாஸாகப் பயன்படுத்தலாம்!

சென்னை: ஹைதராபாத் ஐஐடி நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட்டையே இ-பாஸாகக் கருதி அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி நியமனம்!

சென்னை: தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

EXCLUSIVE: ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதமுடன் ஓர் உரையாடல்!

கர்நாடக ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம் பொது முடக்கம் நாள்கள், ஐபிஎல் தொடர், கேபிஎல் என தனது கிரிக்கெட் அனுபவங்களை நமது ஈடிவி பாரத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அவரின் சிறப்புப் பேட்டி இதோ...

மொபைலே கதி என்றிருக்கும் குழந்தைகளை மீட்பது எப்படி? - அதிர்ச்சித் தகவலும் தீர்வும்!

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் மொபைலே கதி என்று இருக்கிறார்களா? அப்படி என்றால் உங்களுக்காகத்தான் இந்தச் செய்தித் தொகுப்பு.

ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு குறித்து நிதியமைச்சகம் ஆலோசனை!

டெல்லி: கரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் களைவதற்கான முயற்சிகளை மத்திய அரசு உற்று கவனிப்பதாகவும், பெருநிறுவனங்கள், நுகர்வோருக்கு ரெப்போ விகிதத்தைக் குறைப்பது குறித்து ஆலோசனை செய்துவருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19க்கு எதிராகச் செயலாற்றும் நானோ ஸ்பாஞ்சஸ்!

சேக்ரமெண்டோ: கோவிட்-19 வைரசை எதிர்கொள்ள அதிநவீன உயிரியல் தொழில்நுட்பமான ’நானோ ஸ்பாஞ்சஸ்’ ஆய்வில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'இனவெறியர் எனக் கூறியதற்கு ஒருபோதும் மன்னிப்புக் கேட்க மாட்டேன்'

ஒட்டாவா: பிளாக் கியூபெக்கோயிஸ் கட்சியைச் சேர்ந்த எம்பியை இனவெறியர் எனக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாதென புதிய ஜனநாயகக் கட்சி எம்பி ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details