தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-9am
top-10-news-at-9am

By

Published : Jun 15, 2020, 9:49 AM IST

ஏஜிஆர் வரையறையில் அவசர மாற்றம் தேவை!

டெல்லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) சில ஆண்டுகளுக்கு முன்பு ஏஜிஆர் வரையறை தொடர்பான பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அதில் எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை எனத் தலைமை அலுவலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்கும் என்ஐஏ!

டெல்லி: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாகச் சந்தேகிக்கப்படும் தான்யா பர்வீன் என்பவரை மத்தியப் புலனாய்வு முகமை காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகிறது.

இந்தியரைத் தாக்கிய நேபாள ஆயுதப்படைக் காவலர்கள்!

சீதாமர்ஹி (பிகார்): இந்திய- நேபாள எல்லைகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு மத்தியில் இந்தியர் ஒருவரை துப்பாக்கியால் தாக்கி நேபாள ஆயுதப்படை காவலர்கள் துன்புறுத்திய சம்பவமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரூ.9.72 கோடி டெண்டர் மோசடி: அரசு அலுவலர்கள் உள்பட 4 பேர் கைது!

லக்னோ: ரூ.9.72 கோடி டெண்டர் மோசடியில் ஈடுபட்ட மூத்த அரசு அலுவலர்கள் இருவர் உள்பட நான்கு பேரை உத்தரப் பிரதேச காவல் துறை சிறப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

செயல்பாட்டுக்கு வந்த இந்தியாவின் முதல் எரிவாயு வர்த்தகத் தளம் ஐ.ஜி.எக்ஸ்.

ஐ.ஜி.எக்ஸ். என்பது இந்தியாவின் முதல் தானியங்கி தேசிய அளவிலான வர்த்தகத் தளமாகும். இது ஒரு வலுவான எரிவாயுச் சந்தையை ஊக்குவிக்கவும், பராமரிக்கவும், நாட்டில் எரிவாயு வர்த்தகத்தை பெருக்கவும் செய்கிறது.

கரோனா நோயாளிகள் 277 மாயம் - காவல் துறை வலைவீச்சு

சென்னையில் கரோனா நோயாளிகள் 277 பேர் தவறான தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரிகளை கரோனா பரிசோதனை மையங்களில் கொடுத்துவிட்டு தற்போது மாயமானதாக மாநகராட்சி கொடுத்த பட்டியலின் அடிப்படையில் தேடிவருவதாகச் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

பரிசோதனைக்கு மறுத்து காவலர்களை ஆபாசமாகத் திட்டிய மருத்துவர்!

தேனி: ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து மருத்துவர் ஒருவர் காவல் துறையினரை ஆபாசமாகத் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நடுவரைப்போல் நடந்துகொண்டார் பாண்டிங் - சிட்னி டெஸ்ட் குறித்து ஹர்பஜன்!

2008ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங் நடுவரைப்போல் நடந்துகொண்டதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

ஆட்டோமொபைல் துறையில் மீண்டும் வேலையிழப்புகள் நிகழும்!

டெல்லி: ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியின்போது சந்தித்த வேலையிழப்பைப் போன்ற நெருக்கடியான சூழலை கரோனா தாக்கத்தினால் மீண்டும் எதிர்கொள்ள நேரிடும் என்று வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

பூட்டிய எல்லைகளைத் திறக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

பெர்லின்: ஐரோப்பாவில் மூடப்பட்டுள்ள எல்லைகளை மூன்று மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பியர்களுக்கு மட்டும் திறக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details