தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top ten
top ten

By

Published : Sep 2, 2020, 9:28 AM IST

செப்.14இல் கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது!

கரோனா சூழல் காரணமாக சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை ஒரு புரட்சிகர ஆயுதம் - புரட்சியாளர் ஹோ சி மின்

வியட்நாம் விடுதலை போராளி ஹோ சி மினுடைய 51ஆவது நினைவு தினமான இன்று, பத்திரிகை துறை பற்றிய அவரது சிந்தனைகள் குறித்து இத்தொகுப்பு விவரிக்கிறது.

ஏற்காடு செல்ல இ-பாஸ் கட்டாயம் : காரணம் இதுதான்!

சேலம் : சுற்றுலாத் தலமான ஏற்காட்டுக்கு செல்ல மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மலையில் 6ஆவது மாதமாக கிரிவலம் செல்வதற்கு தடை!

திருவண்ணாமலை: கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலின் ஊரடங்கால், 6ஆவது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தப்லீக் ஜமாத் வழக்குகள் அனைத்தும் பிகார் நீதிமன்றத்தில் விசாரணை - உச்ச நீதிமன்றம்!

டெல்லி: தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தையும் பிகாரில் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இ.எம்.ஐ வட்டி குறித்த இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

டெல்லி : கரோனா நெருக்கடி காரணமாக வங்கிக் கடன் மாதத்தவணை (இ.எம்.ஐ) குறித்த இறுதி முடிவை நாளை தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கும் 'முதல் நீ முடிவும் நீ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை (செப்டம்பர் 2) வெளியாக உள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத ஒருவரை குற்றம்சாட்டுவது தவறு - டாப்ஸி

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ரியாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகைகள் லட்சுமி மஞ்சு, டாப்ஸி பண்ணு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

சிக்கலில் சிக்கும் சிஸ்கே...! மற்றொரு வீரரும் விலகலா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று சிஎஸ்கே அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் சரணடைய நவாஸ் ஷெரிப்க்கு நீதிமன்றம் கெடு

லன்டனில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வரும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பாகிஸ்தானில் சரணடைய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details